செய்திகள் யாழ்ப்பாணம்

விவசாயத் திணைக்களத்தின் விவசாயக் கண்காட்சி

”காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி” என்னும் தொனிப்பொருளில் விவசாயத் திணைக்களம் நடாத்தும் விவசாயக் கண்காட்சி எதிர்வரும் 17ம் திகதி திருநெல்வேலி, மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமாகின்றது.

இக் கண்காட்சியினை 17.09.2019 தொடக்கம் 20.09.2019 வரை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 வரை விவசாயிகள், மாணவர்கள், பண்ணைப் பெண்கள் மற்றும் பொதுமக்களும் பார்வையிட்டு பயனடையும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

இங்கு விவசாயத் தகவல் மையம், நாற்றுமேடை தொழில்நுட்பம், கொள்கலன் பயிர்ச் செய்கை. சேதன விவசாயம், கிராமப்புற நகர்ப்புற மற்றும் அலுவலக வீட்டுத் தோட்டம். 6. காளான் செய்கை . பூச்சி உட்புகா வலையினுள் வினைத்திறனான பீடை முகாமைத்துவத்துடன் நிலத்தடி நீர் பாவனைக்கான தொழில்நுட்பம். கால்நடை வளர்ப்பு என 44 வகையான காட்சிக்கூடங்கள் அமைக்கப்படுகின்றன.

இக்கண்காட்சி தொடர்பான மேலதிக விபரங்களை கீழ்வரும் முகவரியூடன் அல்லது கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருநெல்வேலி யாழ்ப்பாணம் – தொலைபேசி : 021-2222175, 021-2222174

Related posts

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 24 பேர் பலி!

Tharani

சூரிய கிரகணத்தை அழகாக மாற்றிய புகைப்படம்

Bavan

வரலாற்றில் இன்று: ஜனவரி 10

Tharani

Leave a Comment