செய்திகள்

விவசாயிகளுக்கு உரத்தினை விநியோகிக்க ஜனாதிபதி பணிப்பு

எதிர்வரும் சிறுபோகத்திற்குத் தேவையான உரத்தினை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

தாமதமின்றி உரத்தினை விநியோகிப்பதற்கு ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ள ஜனாதிபதி, விவசாயிகளை ஒருபோதும் அசௌகரியத்திற்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

உரத்தினை இறக்குமதி செய்தல், விநியோகித்தல் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

உரத்தை விநியோகிப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் நியமங்களைப் பரிசீலனை செய்யும் அறிக்கையை எதிர்வரும் 10 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உயர் நியமங்களுக்கேற்ப உரத்தினை உற்பத்தி செய்யும் நாடுகளை அடையாளங்கண்டு உரம் இறக்குமதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நெற்பயிர்ச்செய்கை உட்பட வருடாந்தம் பயிரிடப்படும் பயிர்கள் மற்றும் அவற்றின் அளவுகளை சரியாக அறிந்து தேவையானளவு உரத்தினை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

79 இலட்சத்தை கொள்ளையிட்டவர் வைத்தியரே! – பிடிபட்டது எப்படி?

G. Pragas

பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்; இலங்கை சிறுபான்மையினர் குறித்து கவனம்

G. Pragas

உலகை உலுக்கும் காெராேனா; இதுவரை 166,067 மரணங்கள்!

G. Pragas