செய்திகள் பிரதான செய்தி

விவசாயிகள், வர்த்தகர்களுக்கு அரசு அறிமுகப்படுத்தும் புதிய முறை!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் விவசாயிகள் மற்றும் மரக்கறி வர்த்தகர்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன் அமைச்சு மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதனடிப்படையில் வர்த்தக மத்திய நிலையங்களில் இருந்து மொத்தமாக மரக்கறி வகைகளை கொள்வனவு செய்து அவற்றை நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்பி வைப்பது என பசில் ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகங்கள் ஊடாக இயங்கும் அத்தியவசிய சேவைகளுக்கான குழு முற்பகல் 10 மணிக்கு முன்னர் விசேட வர்த்தக மத்திய நிலையங்களுடன் தொடர்புகொண்டு தமது பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு தேவைப்படும் மரக்கறி மற்றும் பழங்களின் எண்ணிக்கையினை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அவ்வாறு கோரும் போது பழங்கள் அல்லது மரக்கறிகள் குறைந்தபட்சம் 7 ஆயிரம் கிலோகிராம் காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் மரக்கறிகள் மற்றும் பழங்களுக்கான தொகை மற்றும் பெறுமதி தொடர்பில் பிரதேச செயலகங்கள் மற்றும் விசேட வர்த்தக நிலையங்களுக்கிடையே  இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதேச செயலகங்கள் மற்றும் விசேட வர்த்தக நிலையங்களுக்கிடையே  தொகை மற்றும் பெறுமதி தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர்  கோரப்பட்ட அளவு பழங்கள் மற்றும் மரக்கறிகள் குறித்த பிரதேச செயலகங்களுக்கு விநியோகிக்கப்படும்.

பிரதேச செயலகங்கள் குறித்த மரக்கறிகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் மொத்த விற்பனையாளர்களுக்கு கையளிக்க வேண்டும் என்பதுடன் அவர்கள் பிரதேச செயலகத்தின் கீழுள்ள குழுவின் கண்காணிப்புடன் விற்பனையாளர்களுக்கு குறித்த பொருட்களை கையளிக்க வேண்டும்.

அத்துடன் கிடைக்கப்பெற்ற மரக்கறி வகைகளின் தரம் குறித்த விசேட வர்த்தக நிலையங்களுக்கு அறிவிக்கப்பட வேண் டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த முறைமையினூடாக பல தரப்பினரும் நன்மையடையவுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகின்றது. 

Related posts

வரலாற்றில் இன்று- (13.04.2020)

Tharani

கொரோனா விழிப்புணர்வுக்காக பேயாக மாறிய இருவர்!

Bavan

பொன் சிவகுமாரனின் நினைவேந்தலை அனுஷ்டிக்க ஏற்பாடு

G. Pragas