செய்திகள் பிரதான செய்தி வவுனியா

விஷவாயு தாக்கி வவுனியாவில் இளைஞன் சாவு!

வவுனியா – சேமமடுப் பகுதியில் இன்று (12) மதியம் விஷவாயு தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எஸ்.ரஞ்சித்குமார் (28-வயது) என்ற இளைஞனே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மடுப் பகுதியிலுள்ள காணியொன்றில் பல மாதங்களாக குவித்து வைக்கப்பட்டிருந்த மாட்டு சாணத்தை சிலர் பாரவூர்தியில் ஏற்றியுள்ளனர். இதன்போது சாணம் ஏற்றிய இளைஞர் இளைப்பாறுவதற்காக குறித்த சாணக் கும்பத்தின் மேல் அமர்ந்துள்ளார்.

அப்போது மாட்டு சாணத்தில் இருந்து வெளியேறிய விஷவாயு காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட முன்னரே குறித்த இளைஞர் இறந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் சுதேச வைத்தியத்துக்கு உண்டு!

G. Pragas

கர்ப்பிணிகளுக்கு போசாக்கு பொதிகள் வழங்கப்பட்டன

G. Pragas

அங்கஜனுக்கு எதிராக போராட்டம்! – உறுப்பினர்கள் வெளிநடப்பு

G. Pragas