செய்திகள்

விஸ்வாசம் பாடலாசிரியர் எழுதிய கொரோனா விழிப்புணர்வு பாடல்

பாடலாசிரியர் அருண் பாரதியின் கொரோனா விழிப்புணர்வு  பாடல் 

அந்த பாடல் வரிகள் இதோ….

பல்லவி

எத்தனை போர்களை

தாண்டினோம்

எத்தனை வலிகளைத்

தாங்கினோம்

கொரனோ என்னும்

தொற்றுக்கா – நாம்

தோற்றுப் போகப் போகிறோம் ?

அனைவரும் ஒன்றாய்

இணைந்துதான்

வெற்றிகள் ஆயிரம்

தேடினோம்

இனி தனித்தனியாகப்

பிரிந்துதான்

வெற்றியைப் பார்க்க போகிறோம்

குழிகளைத் தோண்டிப்

புதைத்தாலும் – அதில்

செடியாய் நாங்களும் முளைப்போமே

வைரஸ் என்கிற

ஆயுதத்தை – எங்கள்

ஒற்றுமை கொண்டு உடைப்போமே

சரித்திரத்தில் நாம்….

சரித்திரத்தில் நாம்….

சரணம் – 1

வெள்ளை உடையில் இராணுவ வீரன்

நீயும் பார்த்ததுண்டா

கொள்ளை நோயில் மருத்துவன் தானே

இராணுவ வீரனடா

லத்திகள் இன்றி புத்திகள் சொல்லும்

போலீஸ் பார்த்ததுண்டா

போலீஸ் எல்லாம் போலிகள் இல்லை

காவல் சாமியடா

அழுக்கை எல்லாம்

அடித்து விரட்டும்

துப்புரவுத் தொழிலாளி

உலகில் கடவுள்

இருந்தால் அவன்தான்

அவனுக்கும் முதலாளி

தனியாய் இருந்து

தடுப்பவன் எவனோ

அவனே அறிவாளி

உயிரை எடுக்கும்

கொரோனா நோயின்

உயிரை எடுப்பாய் நீ

சரித்திரத்தில் நாம்….

சரித்திரத்தில் நாம்….

Related posts

சூரிய கிரகணம் – பல மாவட்டங்களில் தென்பட்ட விதம்!

Tharani

ஐதேக தீர்மானத்தை தடை செய்ய கோரிய மனு நிராகரிப்பு!

G. Pragas

யாழ் படைத் தலைமையகத்தில் நத்தார் நிகழ்வு

Tharani