கிழக்கு மாகாணம் செய்திகள்

வீட்டின் மீது தாக்குதல்

அம்பாறை – அக்கரைப்பற்று பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று, 01ம் பிரிவு, யூனியன் வீதியில் அமைந்துள்ள அ.மு.அ.றஸ்மி என்பவரது வீட்டின் மீதே குறித்த தாக்குதல் சம்வம் இன்று (10) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் வீட்டின் முன் ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த சிறு உபகரணங்களும் சிலவற்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வீட்டின் மீது கடந்த 3ம் திகதியும் இதே பாணியில் அமைந்த தாக்குதல் சம்பவம் குறித்தும் பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இதுவரை 180 பேர் கைது!

G. Pragas

கொரோனா சாவு எண்ணிக்கை 30 ஆயிரம் தாண்டுகிறது!

G. Pragas

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது

reka sivalingam