செய்திகள் முல்லைத்தீவு

வீதியின் இடைநடுவே புனரமைக்கப்படாத வீதி!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதான வீதி காபேற் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவ் வீதியின் இடையில் 1 கி.மீ வரையான வீதி புனரமைக்கப்படாமல் செம்மண்ணால் போடப்பட்ட வீதியாக உள்ளது. குறித்த பகுதி குன்றும் குழியுமாக உள்ளதோடு மிகவும் பள்ளமான பகுதியாகவும் காணப்படுகிறது.

மழை காலம் ஆரம்பித்த நிலையில் குறிப்பிட்ட பகுதியில் வீதி புனரமைக்கப்படாததால் மக்கள் பிராயாணம் செய்வதில் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிடுகிறது.

இதனால் இவ்வீதியை திருத்தி போக்குவரத்து செய்வதற்கு இலகுபடுத்துமாறு இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (B)

Related posts

சிற்பக் கற்கை நெறி சான்றிதழ் வழங்கலும் கண்காட்சி ஆரம்பமும்

admin

80 மணி நேரப் போராட்டம் தோல்வி – சிறுவன் மரணம்!

G. Pragas

vivo புதிய ஸ்மார்ட் போன் சந்தைக்கு!

G. Pragas

Leave a Comment