in ,

வீதியில் நடமாடியவர்கள் மீது மேற்கொண்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா!

வீதியில் நடமாடியவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி.

நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் நடமாடியவர்களை வழிமறித்து வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று (21.08.2021) அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணி முதல் எதிர் வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா நகரப்பகுதிகளில் சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வீதியில் நடமாடியவர்களை வழிமறித்து அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. மாவட்ட பதில் அரசாங்க அதிபர் நேரடியாக விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.

முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஏனையவர்கள் சுகாதாரப் பிரிவினராலும், பொலிசாராலும் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

“அரசின் வாழ்வாதார உதவித் தொகை கிடைத்துள்ளது”_ யாழ் அரச அதிபர்!

‘தியாகத்துக்கு தயார்’ – சு.க. எம்.பிக்கள் சம்பளத்தை வழங்குகிறது!