பிந்திய செய்திகள் பிரதான செய்தி

வீழ்ந்தாலும் மீண்டெழும் சக்தி சுந்திர கட்சிக்கு உண்டு – தயாசிறி

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அழிந்துவிடும். அதனுடைய இறுதிப் பயணம் ஆரம்பமாகிவிட்டது என்று சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. எப்படி வீழ்ந்தாலும் மீண்டெழும் சக்தி சுதந்திரக் கட்சிக்கு இருக்கின்றது. அக்கட்சியை எவரும் குழிதோண்டி புதைக்க முடியாது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது மாநாட்டில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களால் 47 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெறமுடியாது.

எனவே, சுதந்திரக்கட்சிதான் தீர்மானிக்கும் சக்தி என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்.

Related posts

மொழி, கலாசாரத்தை இழக்கும் இனம் வரலாற்றிலிருந்து அழிக்கப்படும்

Tharani

பிரதமரின் கூட்டத்தில் கூட்டமைப்பினர் உட்பட 200 முன்னாள் எம்பிகள்

G. Pragas

18 நாட்களின் பின்னர் வௌியேறினார் ராஜித!

reka sivalingam