in , , , ,

வெகுண்டெழுந்த மக்கள் திரளுடன் ஐந்தாம் நாள் பேரணி நிறைவு!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் தொடர் போராட்டத்தில் நான்காம் நாள் பேரணி இன்று (6) இரவு 7.30 மணியுடன் கிளிநொச்சி டிப்போ சந்தியுடன் முடிவுக்கு வந்தது.

முன்னதாக இரணைமடு சந்தியில் கூடிய மக்கள் பேரணியை வரவேற்றனர். அந்த வரவேற்பை தொடர்ந்து பேரணி டிப்போ சந்தியை சென்றடைந்தது.

பின்னர் கந்தசுவாமி கோவிலுக்கு அண்மையில் மூன்று நாள் சுழற்சி முறை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுளின் போராட்டம் நடைபெற்ற பகுதிக்குச் சென்ற போராட்ட ஏற்பாட்டாளர்கள் அந்த மக்களை சந்தித்து உரையாடியதுடன், ஏற்பாட்டாளர்களில் ஒருவரான வேலன் சுவாமி நீராகாரம் வழங்கி போராட்டத்தை முடித்துவைத்தார்.

தொடர்ந்து புலிகளை மீள உருவாக்க முயன்றதாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையை வலியுறுத்திப் போராடிவருபவர்களையும் பேரணி ஏற்பாட்டாளர்கள் சந்தித்தித்துக் கலந்துரையாடினர்.

நாளை காலை 8 மணிக்கு ஐந்தாம் நாள் பேரணி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி யாழ்ப்பாணம் வரவுள்ளது.

மன்னார்,

நண்பகல் 12 மணியளவில் மன்னார் மடுச் சந்தியை பேரணி சென்றடைந்தது. அதன்பின்னர் அங்கிருந்து முருங்கன் ஊடாக மன்னார் நகர் நோக்கிச் சென்றது.

இதன்போது, பிரதான வீதிகளில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகளில் பொலிஸ் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு தடைகளையும் தாண்டி குறித்த பேரணி மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகரைச் சென்றடைந்தது.

மன்னார் பிரதான பாலத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதோடு, மன்னார் நீதிமன்றத்தின் கட்டளையினையும் வழங்கி ஒலி பெருக்கி மூலம் அறியப்படுத்தினர்.

அத்துடன், பேரணியாக வந்த மோட்டார் சைக்கள் மற்றும் வாகனங்களின் இலங்கங்களையும் பொலிஸார் பதிவுசெய்த பின்னர் மன்னார் நகரப் பகுதிக்குள் செல்ல அனுமதித்தனர். மன்னார், பிரதான பாலத்தில் இருந்து மன்னார் நகரப் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலையடி வரை குறித்த பேரணி சென்றது.

அங்கு மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகளும் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்ஸிம் மக்களும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து இணைந்துகொண்டனர்.

முறி மோசடியாளர்கள், ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தாரிகளுக்கு ஓரிரு வாரத்தில் தண்டனை!

ஆசிரியர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!