செய்திகள் பிரதான செய்தி முல்லைத்தீவு

வெடி பொருட்களை தேடி வெறும் கையுடன் திரும்பிய அதிரடிப்படை!

முல்லைத்தீவு – மாத்தளன் பகுதியில் புலிகளின் கடற்புலி முகாம் அமைந்திருந்த காணியில் வெடி பொருட்களை தேடி அகழ்வு நடவடிக்கையாென்று இன்று (04) முன்னெடுக்கப்பட்டது.

சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் குறித்த பகுதியில் வெடிபொருட்கள் மற்றும் பெறுமதியான பொருட்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடத்தினை முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் அனுமதி கோரி அகழ்வு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

6 மணி நேரமாக இடம்பெற்ற அகழ்வின் போது தேடி வந்த பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை என்றும் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட கொடி உள்ளிட்ட சில ஆவணங்களே மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

இராணுவச் சிப்பாய் விடுதலைக்கு பல்கலை மாணவர் ஒன்றியம் கண்டனம்!

reka sivalingam

குவைத்தில் இருந்து திரும்பிய சகலருக்கும் பிசிஆர் சோதனை! – அனில் ஜயசிங்க

G. Pragas

நீதிபதியின் கழுத்தை அறுப்பேன் என்று நீதிமன்ற வளாகத்துக்குள் அச்சுறுத்தல்

G. Pragas