செய்திகள் வவுனியா

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சென்ற ரவிகரன் குழுவினர்

வவுனியா – நெடுங்கேணி, ஒலுமடுப் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் காணப்படும் சிக்கல் நிலைமைகள் தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழு இன்று (25) நேரில் சென்று ஆராய்ந்துள்ளது.

குறிப்பாக வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திலும், அதனை அண்டிய பகுதிகளிலும் துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளக்கூடாதெனவும், குறித்த ஆலயப் பகுதிக்கு மக்கள் செல்வததைத் தடைசெய்வேண்டுமெனவும், ஆலயத்தின் வருடாந்த திருவிழாவினையும் தடை செய்யக்கோரி தொல்லியல் திணைக்களத்தினர் நெடுங்கேணி பொலிஸாரிடம் முறையிட்டதுடன், நீதிமன்றிலும் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

அதற்கமைய குறித்த வழக்கினை ஆராய்ந்த வவுனியா நீதிமன்று, ஆலயத்தின் வருடாந்த திருவிழாவினை வழமைபோன்று நடாத்த முடியுமெனவும், அங்கு பக்தர்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள முடியுமெனவும் தீர்ப்பளித்திருந்தது.

அந்தவகையில் தற்போது குறித்த ஆலயத்தினுடைய வருடாந்த திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில், ஆலயத்திற்கு வெளியிடங்களிலிருந்து வரும் பக்தர்களின் விபரங்களை பொலிஸார் சேகரிப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின், ஒன்பதாம் நாள் திருவிழா இன்றையநாள் இடம்பெற்ற நிலையில் அங்கு நேரடியாகச் சென்ற து.ரவிகரன் அங்குள்ள சிக்கல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், திருவிழா பூசை வழிபாடுகளிலும் கலந்துகொண்டிருந்தார். (246)

Related posts

மீண்டும் மழை அதிகரிக்கலாம்

reka sivalingam

50 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது!

G. Pragas

எக்னெலிகொட கடத்தல் வழக்கில் 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

G. Pragas