in ,

வெலிக்கடைசிறை படுகொலை நினைவு தினம் மன்னாரில் அனுஷ்டிப்பு!

வெலிக்கடை சிறை படுகொலையின் 38 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (27) மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அலுவலகத்தில் நினைவு கூரப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ) கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன் ராஜ் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தங்கதுரை,தளபதி குட்டிமணி, ஜெகன்,தேவன் உட்பட 53 அரசியல் கைதிகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

உருவப்படங்களுக்கும் மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழில் 46 குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கிய தாதிக்கு கொரோனா தொற்று!

குளிரூட்டி வாகனத்தில் இறைச்சிக்காக கொண்டுசெல்லப்பட்ட மாடுகள் மீட்பு!