செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

வெளிநாட்டில் இருந்து வந்தோருக்கு யாழ் அரச அதிபர் அறிவுறுத்தல்

யாழ் மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பி பதிவினை மேற்கொள்ளாதவர்கள் எவராவது இருந்தால் தங்களுடைய பெயர் விபரங்களை பதிவு செய்து ஒத்துழைக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் வேண்டுகேள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரசினுடைய தாக்கம் அதிகரித்துக்கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் வைரசின் தாக்கத்தை எவ்வாறு எதிர்கொள்வது என ஆராயும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் நேற்று (17) இடம்பெற்றது.

குறித்த கூட்டம் நிறைவடைந்ததும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் க.மகேசன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும்,

குறிப்பாக மார்ச் மாதம் 1ம் திகதிக்கு பின்பு வருகை தந்தவர்கள் கட்டாயம் பதிவு செய்யது அவசியம்.

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்திருப்பவர்கள் அல்லது வெளியூர்களுக்கு சென்று வந்தவர்கள் தங்களை தாங்களே 2 வாரங்கள் தனிமைப்படுத்தி நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவர்களது பொறுப்பாகும்.

யாழ் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் தீவகப் பகுதிகளான நெடுந்தீவு மற்றும் நைனாதீவுக்கு யாத்திரியர்கள், உல்லாசப் பயணிகள் வருவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. – என்றார்.

இதேவேளை யாழ் மாவட்டத்தில் சுமார் 582 வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

பூஜித – ஹேமசிறிக்கு தொடரும் மறியல்

reka sivalingam

சட்டவிரோமாக நாட்டில் தங்கியிருந்த சுவிஸ் நாட்டவர்கள் கைது!

Tharani

சீனா செல்ல தடை விதித்தது முகநூல்

G. Pragas

Leave a Comment