செய்திகள்

வெளிநாட்டு ஒப்பந்தங்களுக்கு இடைக்காலத் தடை கோரி மனு

வெளிநாட்டு உடன்படிக்கை கையெழுத்திடுவதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு கோரி நேற்று (01) உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை ஒப்பந்தம் எனப்படும் ACSA உடன்படிக்கை, சோஃபா உடன்படிக்கை மற்றும் மிலேனியம் சவால்கள் நிதிய உடன்படிக்கைகளுக்கு எதிராகவே அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் தர்ஷன வேரதுவகே தாக்கல் செய்துள்ள குறித்த மனுவில் சட்டமா அதிபர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனம் இலங்கைக்கு வழங்கும் 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை கடந்த 29ம் திகதி அனுமதி வழங்கியிருந்தது.

Related posts

கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியானது

G. Pragas

இந்திய ரி-20 அணி அறிவிப்பு

G. Pragas

இன, மத, மொழி பேதம் ஆகியவற்றை கடந்து செயலாற்றுவேன்!

G. Pragas

Leave a Comment