செய்திகள்

வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின்றி நடைபெறும் தேர்தல்!

இன்று நடைபெற்று வரும் தேர்தலில் வழமை போன்று வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் எவரும் பங்கேற்கவில்லை.

இதனால் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின்றி நடைபெறும் முதலாவது தேர்தலாக இது அமைந்துள்ளது.

இதற்கு முன்பு இலங்கையில் நடைபெற்ற தேர்தல் கண்காணிப்பில் ஐரோப்பிய ஒன்றியம், தேசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பு, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், இம்முறை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையாலும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகை தரவில்லை.

எனினும், உள்நாட்டு கண்காணிப்பு அமைப்புகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகள் வழங்கியுள்ளன என அறியமுடிகின்றது.

Related posts

மேலும் பத்து பேர் குணமடைந்தனர்

G. Pragas

உண்மைகளை போட்டுடைத்த ரஞ்சன் – வாயடைத்து நின்றது ஆளும் தரப்பு!

G. Pragas

முச்சக்கரவண்டி விபத்து – இருவர் படுகாயம்!

reka sivalingam