சினிமா செய்திகள்

வெளியாக முன் கோடிகளை அள்ளிய மாஸ்டர் உரிமம்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் வியாபார உரிமம் வெளியாகியுள்ளது.

இந்த படம் ‘பிகில்’ படத்தின் வியாபாரத்தை விட அதிகமாகியுள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். 
அதன் படி, 

  1. தமிழ்நாட்டு உரிமை ரூ.80 கோடி
  2. வெளிநாட்டு உரிமை ரூ.30 கோடி
  3. தெலுங்கு உரிமை ரூ.10 கோடி
  4. கேரளா உரிமை ரூ.9 கோடி
  5. கர்நாடகா உரிமை ரூ.10 கோடி, 
  6. ஹிந்தி & சட்டலைட் & டிஜிட்டல் உரிமை ரூ.25 கோடி
  7. தமிழ் சட்டலைட் உரிமை ரூ.30 கோடி
  8. தமிழ் டிஜிட்டல் உரிமை ரூ.20 கோடி
  9. ஆடியோ உரிமை ரூ.5 கோடி 

என இதுவரை மொத்தம் ரூ.219 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றிருக்கிறது என்கிறார்கள்.

படத்தின் பட்ஜெட் சுமார் 150 கோடி. எனவே, வெளியீட்டிற்கு முன்பாகவே சுமார் 70 கோடி வரை லாபத்தைப் பார்த்துள்ளார் நடிகர் விஜய்யின் உறவினரும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ.
விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் வியாபாரம் ‘தர்பார்’ வியாபாரத்தை விடவும் அதிகமாக நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Related posts

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கலந்துரையாடல்

reka sivalingam

மீன்பிடி கைத்தொழில் குறித்து ஜனாதிபதி முக்கிய அறிவுறுத்தல்

G. Pragas

கல்வியங்காடு ஆலயத்தில் திருட்டு!

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.