in

வெள்ளக்காடாகியுள்ள வடக்கு!! – தொடரவுள்ளது கன மழை!

வடக்கில் தற்போது பெய்துவரும் கன மழையால் பல இடங்கள் வெள்ளக்காடாகியுள்ள நிலையில், இன்னும் ஓரிரு தினங்கள் மழை தொடரும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதி அதிகாலைவரை அல்லது நாளை இரவு வரையும் மழை தொடரும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழக புவியியல்துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தற்போது வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் மழை பெய்துவருகின்றது.

வடக்கு மாகாணத்தில் தொடரும் மழையால் தாழ் நிலங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

வடக்கில் உள்ள குளங்கள் பலவற்றின் வான் கதவுகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரிரு நாள்கள் மழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் இப்போது எங்கே?

பெயர் எதுவாகிலும்…! #ஆசிரியர் தலையங்கம்