கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

வெள்ளத்தில் பாதிப்புற்ற குடும்பங்களுக்கு உதவி வழங்கல்

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசிவந்தீவு கிராமத்தில் இரண்டு தடவை ஏற்பட்ட வெள்ளத்தால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு நாசிவந்தீவு கிராம அதிகாரி அலுவலகத்தில் நேற்று (27) நடைபெற்றது.

கிழக்கு மாகாண நட்சத்திர விடுதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நாசிவந்தீவு கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வறிய நிலையில் உதவிகள் பெறும் நூறு குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

நாசிவந்தீவு கிராம அதிகாரி க.ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண நட்சத்திர விடுதிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.றொசான், பாசிக்குடா சுற்றுலா அதிகார சபையின் கனிஸ்ட முகாமையாளர் எம்.எச்.எம்.மாஹிர், பாசிக்குடா த ஹாம் ஹோட்டல் பொது முகாமையாளர் சுசந்த பன்டார, நாசிவந்தீவு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், பாசிக்குடா ஹோட்டல் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசிவந்தீவு கிராமத்தில் இரண்டு தடவை ஏற்பட்ட வெள்ளத்தால் பிரதான வீதி போக்குவரத்து தடைப்பட்டதுடன், இரண்டு பக்கமும் ஆற்றினால் சூழப்பட்ட கிராமம் என்பதால் இங்கு வசிக்கும் அனைத்து மக்களும் வெள்ளத்தால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 102 ஆகியது!

G. Pragas

மேலும் 63 பேர் குணமடைந்தனர்!

G. Pragas

மாளிகாவத்தை நெரிசலில் மூன்று பெண்கள் பலி! பலர் படுகாயம்!

G. Pragas