செய்திகள் பிராதான செய்தி

‘வெள்ளை வான்’ சாரதிகளுக்கு 72 மணி நேரம் தடுப்புக் காவல்

அண்மையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் வெள்ளைவான் மனிதக் கடத்தலின் போது சாரதிகளாக செயற்பட்டதாக தெரிவித்து பேட்டியளித்த இருவரை சிஐடியினர் இன்று (14) கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த இருவரையும் 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறு தினம் (16) நீதிமன்றில் ஆஜரப்படுத்தபடவுள்ளனர்.

குறித்த ஊடக சந்திப்பில் குறித்த இருவரும், பலர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் முதலைகளுக்கு ஆற்றில் இரையாக போடப்பட்டதாகவும் பரபரப்பான தகவலை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த சிஐடியினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

Related posts

குஷ்புவுக்கு கஸ்தூரி பாராட்டுமழை

G. Pragas

இந்த வருடம் பகிடிவதைக்கு முடிவு!

Tharani

டெல்லியில் சூரியகிரகணம் பார்த்த மோடி

Bavan

Leave a Comment