செய்திகள் மன்னார்

வெள்ள நீர்த் தேக்கத்திற்கு தீர்வு வழங்க நகர சபை உறுப்பினர்கள் கோரிக்கை

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தேங்குகின்ற மழை நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மன்னார் நகர சபை உறுப்பினர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் 20வது அமர்வு இன்று (21) நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த அமர்வின் போதே நகர சபை உறுப்பினர்கள் குறித்த கோரிக்கையினை முன்வைத்தனர். மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மன்னார் நகர சபைக்குட்பட்ட பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

எனவே குறித்த மழை நீரை வெளியேற்றும் வகையில், வடிகானமைப்புக்கள் சீர் செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் நகர சபை உறுப்பினர்கள் என்ற வகையில் எங்களிடம் தமது பிரச்சினைகளை முன்வைக்கின்றனர். எனவே, நாங்கள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

Related posts

ஓமந்தையில் கோர விபத்து பலர் பலி! பஸ் எரிப்பு!

reka sivalingam

மட்டுவில் மண் சூறையாடல்; நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Tharani

உலக உதவி நிறுவனங்களிடம் கோத்தபாய வேண்டுகோள்!

Bavan