in , ,

வேட்டைத் துப்பாக்கியுடன் வடமராட்சி கிழக்கில் மூவர் கைது!

வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி, அவற்றுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பன்றி இறைச்சி என்பவற்றுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுண்டிக்குளம் காட்டு பகுதியில் மூவர் வேட்டையில் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் கடற்படையினர் நடத்திய தேடுதலின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களையும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் இறைச்சி என்பவற்றை கடற்படையினர் மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தெல்லி. யூனியன் கல்லூரி விவகாரம்; நீதிமன்றம் கடுமையான தீர்ப்பளித்தது!

சொந்த மண்ணில் இலங்கையை மிரல வைக்கும் பங்களாதேஷ்