செய்திகள் மலையகம்

வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் இடையே மோதல்; மாறி மாறி குற்றச்சாட்டு!

நுவரெலியா – அக்கரப்பத்தனை பகுதியில் இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் இடையே சிறிய மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து இரு தரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டியுள்ளன.

தாம் பயணித்த வாகனத்தை வழிமறித்து மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் குழப்பம் விளைவித்து தாக்குதல் நடத்தியதாக நாடாளுமன்ற வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவரால் அகரப்பத்தனை பொலிஸ் நிலையம், நுவரெலிய மாவட்ட பொலிஸ் காரியாலயம், தேர்தல் ஆணையகம் என்பவற்றில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் தமது ஆதரவாளர்கள் மீதே தாக்குதல் நடந்ததாக பதிலுக்கு மலையக மக்கள் முன்னணி பொது செயலாளர் லோரன்ஸ் குற்றம்சாட்டியுள்ளதுடன், தேர்தல் ஆணைக்குழுவில் முறையிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Related posts

கரம்பையில் வாகனங்களுக்கு தொற்று நீக்கம்

Tharani

இன்று இதுவரை 94 பேருக்கு காெராேனா!

G. Pragas

உணர்வெழுச்சியுடன் தியாக தீபத்தின் நினைவேந்தல் ஆரம்பம்

G. Pragas