செய்திகள்

வேட்பாளர்களுக்கு ஒலி, ஔிபரப்புக் கட்டுப்பாடு

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் ஒலி, ஔிபரப்புக்கான நேரத்தை பயன்படுத்தி ஏனைய வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று ​தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஒலி, ஔிபரப்பிற்கான நேர ஒதுக்கீட்டுக்கு அமைய, அரச தொலைக்காட்சி மற்றும் அரச வானொலி ஊடாக உரைநிகழ்த்துவதற்கு 45 நிமிடங்கள் வழங்கப்படுகின்றன.

வேட்பாளர் ஒருவரின் உரையைப் பதிவுசெய்து அதனை பரிசோதித்த பின்னர் ஒலி, ஔிபரப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில், பதிவு செய்யப்பட்ட உரை வேறொரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமையும் பட்சத்தில் அதனை ஒலி, ஔிபரப்பு செய்யாதிருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

Related posts

நினைவேந்தல்களை தடுக்க அரசு இரகசிய சதி – புவனேஸ்

G. Pragas

பணம் பெற்று மரண தண்டனைக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டதா?

G. Pragas

தீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு!

G. Pragas

Leave a Comment