in , ,

வேணாவிலில் மின்னல் தாக்கி இளைஞன் காயம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வேணாவில் கிராமத்தில் இன்று (16) மாலை மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வீட்டிலிருந்த வேப்பமரத்தின் கீழிருந்த கோடரியை எடுக்கச் சென்றபோது மரத்தில் மின்னல் தாக்கியதாகவும் அதனால் அவருடைய உடலிலும் காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது.

காயமடைந்த 26 வயதான குறித்த இளைஞர் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனது தந்தைக்காக எம்மோடு கைகோருங்கள் – அசேலவின் மகள்

நாட்டில் கொரோனா பலியெடுப்பு 615 ஆக உயர்வு!