செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

வேம்படி பாடசாலையின் முன்னாள் அதிபருக்கு வெடி குண்டு மிரட்டல்!

யாழ்ப்பாணம் – வேம்படி பகுதியில் உள்ள உயர் தரப் பாடசாலையொன்றின் அதிபருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று (31) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் முன்னாள் அதிபர் ஒருவரின் பெயர் குறிப்பிட்டு குறித்த அநாமதேயக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் கடமை புரிந்த அதிபரின் பெயருக்கு விலாசமிடப்பட்ட கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் அண்மையில் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது புதிய அதிபர் ஒருவரே கடமையில் இருக்கின்றார்.

இந்த நிலையில், முன்னாள் அதிபர் குறித்த கடிதத்தை பிரித்து படித்தபோது, அவரது பெயரை குறிப்பிட்டு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்துள்ளது. இதனையடுத்து, பொலிஸ் நிலையத்துக்கு கடிதத்துடன் சென்ற முன்னாள் அதிபர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

Related posts

தமிழருக்கு சௌபாக்கியத்தை பெற்றுத் தருவேன் – கோத்தாபய

G. Pragas

“திலீபன் வழியில் வருகிறோம்” நான்காம் நாள் பயணம்

G. Pragas

தேர்தலை நடத்த முடியாது – உச்ச நீதிமன்றம் அறிவித்தது

admin

Leave a Comment