உலகச் செய்திகள்செய்திகள்

வேற்றுக்கிரகவாசிகளுக்கு டிஜிட்டல் நிர்வாண படங்கள் – நாஸாவின் புதிய திட்டம்

ஏலியன்ஸ் என அழைக்கப்படும் வேற்றுக்கிரவாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்த நாஸா பிரத்தியேக திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது.

வேற்றுக்கிரகவாசிகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பல வருடங்களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

படர்ந்து கிடக்கும் இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமே உயிர்கள் இருக்கிறது என்பதை நம்ப அவர்கள் தயாராக இல்லை.

அதனால் பல்வேறு ஆய்வாளர்களும் பூமியைப் போல உயிர்கள் வாழும் வேறொரு கிரகம் உள்ளதா என்பதை கண்டறிய ஆய்வுகளில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் நாஸா ஆராய்ச்சியின் ஒருபகுதியாக ‘பீகன் இன் தி கேலக்சி’ என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்துவதே இந்தத் திட்டம் முக்கியமான நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆண் மற்றும் பெண் மனிதர்களின் நிர்வாண படங்களை விண்வெளியில் ஒளிர செய்து வேற்றுக்கிரகவாசிகளை கவர முயற்சியில் நாஸா ஈடுபட்டுள்ளது.


கணிதத்தில் உள்ள பைனரி குறியீடுகள் உடன் இந்த புகைப்படங்களை நாசா வடிவமைத்துள்ளது.

இந்த குறியீடுகளை வேற்றுகிரக வாசிகள் புரிந்து கொள்ளும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,939