செய்திகள்

வைக்கோலை சேதனப் பசளையாக மாற்றுமாறு கோரிக்கை

அறுவடையின் பின்னர் எஞ்சக்கூடிய வைக்கோலை சேதனப் பசளையாக மாற்றுமாறு அம்பாறை மாவட்ட விவசாயிகளிடம் விவசாயத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

நெல் அறுவடை நிறைவடையும் நிலையில், செய்கை நிலத்தை மேலும் வளப்படுத்தும் முகமாக இதனை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இரசாயனப் பசளையின் பயன்பாட்டினைக் குறைத்து, சேதனப் பசளையின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், கமநல சேவை மத்திய நிலையத்தினூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனொரு பகுதியாகவே அறுவடையின் பின்னர் எஞ்சக்கூடிய வைக்கோலை எரியூட்டாது சேதனப் பசளையாக மாற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கோத்தாவை பேரினவாதிகள் இயக்குகின்றனர் – வேலு

reka sivalingam

பங்குனி உத்தரம் இன்று

Tharani

வீட்டுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Tharani