குற்றம்செய்திகள்

வைத்தியராக தன்னை அடையாளம் காட்டி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட வைத்தியராக தன்னை அடையாளம் காட்டி, பல்வேறு நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட பிலியந்தலாவ பகுதியைச சேர்ந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டுக்காக குறித்த பெண்ணின் கணவரும் தெஹிவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். .

இதற்கிடையில் பொலிஸ் அதிகாரியாக தன்னை காண்பித்து பல நபர்களிடமிருந்து 86 ஆயிரம் ரூபா பணம் வசூலித்த குற்றச்சாட்டில் ஒருவரும் கல்கிஸை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994