கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

வைத்தியரை தாக்கியவர் கைது!

கடமை நேரத்தில் இருந்த வைத்தியர் ஒருவரை தாக்கிய சந்தேகநபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை – கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நேற்று (29) மதியம், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை பிரிவிற்கு காயம் ஒன்றிற்கு சிகிச்சைக்காக சென்ற இருவர், அங்கு கடமையில் இருந்த வைத்தியருடன் முரண்பட்டுள்ளனர்.

பின்னர் நோயாளியுடன் வந்த நபரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட வாக்குவாதம், சிறு கைகலப்பாக மாறியுள்ளது.

இதனால் சிறு காயங்களுக்கு உள்ளான வைத்தியர், அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் 41வயதுடைய சந்தேகநபர் வைத்தியரின் முறைப்பாட்டிற்கமைய கைது செய்யப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

இன்று 26 பேருக்கு கொரோனா!

G. Pragas

பேருந்தில் ஜெலக்னெட் வெடி குச்சிகள் மீட்பு! இருவர் கைது!

Tharani

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து பிரதமர் உறுதியளித்தாரா?

G. Pragas