கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

வைரஸ் குணமடைய வேண்டும் என்பதை மனதில் நிறுத்துக!

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உட்பட்டிருக்கும் உறவுகள் விரைவில் குணமடைய வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி பிரார்த்திப்பதாக முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

நேற்று (22) அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்,

நாம் அனைவரும் இந்த வைரஸ் தாக்கம் ஏற்படாதிருக்கும் வகையிலும் அறிவியல் ரீதியில் சுகாதாரத்துறை கூறும் ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடந்து கொள்வது மிக முக்கியமானது. குறிப்பாக அரச மருத்துவ உத்தியோகத்தர் கூட்டமைப்பு கூறும் வழிப்படுத்தல்களை செவிமடுத்து செயல்படுத்துவது அவசியமாகும்.

மேலும், சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பது நமது பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானமாகும் என்பதை அழுத்தியுரைக்க விரும்புகிறேன். – என்றார். (150)

Related posts

ஈழத் தமிழருக்கு நீதி இல்லையா?

Bavan

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Tharani

வெளியறிவை வளர்த்துக் கொள்ளாமையால் தொழில் வாய்ப்பு பறிபோகிறது

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.