செய்திகள் பிரதான செய்தி

ஷஹ்ரானின் பிரச்சார விவகாரம்; சிறுவர்களிடம் வாக்குமூலம் பெற்ற நீதிபதி

பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமின் ஆயுத பயன்பாடு மற்றும் தீவிரவாத பிரச்சாரத்தில் பங்குபற்றியதாக கூறப்படும் 8 மற்றும் 16 வயதுடைய சிறுவர்கள் இருவரிடம் நேற்று (13) கோட்டை நீதிபதி ரங்க திஸ்ஸாநாயக்கவினால் 4 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டது.

குறித்த சிறுவர்களின் பெற்றோரினால் சிஐடிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் நீதிபதியால் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

தனியார் சட்டத்தரணிகளுடன் ஆஜரான சிறுவர்களிடம் தமிழ் மொழிமூல மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதேவேளை குறித்த ஆயுத பயன்பாடு மற்றும் தீவிரவாத பிரச்சாரத்தில் கலந்து கொண்ட 16 சிறுவர்களிடம் இதுவரை சிஐடியினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

Related posts

கிளிநொச்சியில் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு

கதிர்

தாஜ்மஹாலில் ட்ரம்பின் மகள்; மீம்ஸ்களுக்கு டுவிட்டரில் பதில்!

Bavan

அம்பிகாவுக்கு தமிழ் அரசு கட்சி மகளிர் அணி கடும் எதிர்ப்பு! – சேனாதியிடம் முறையீடு

G. Pragas