செய்திகள் பிராதான செய்தி வவுனியா

ஸ்ரீரங்கா மற்றும் ஐவருக்கு பிணை!

2011ம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் சட்டமா அதிபரால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊடகவியலாளரும், முன்னாள் எம்பியுமான ஜே.ஸ்ரீரங்கா மற்றும் ஐவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (18) சற்றுமுன் பிணை வழங்கியுள்ளது.

ஸ்ரீரங்கா மற்றும் நான்கு பொலிஸார் உள்ளிட்ட அறுவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்ரீரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய ஜயமினி புஸ்பகுமார என்ற பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார். இந்த வழக்கிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கா உள்ளிட்ட சிலர் மன்னார் நோக்கிப் பயணித்த போது, செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார். உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தைச் செலுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஸ்ரீரங்கவே வாகனத்தைச் செலுத்தியதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்திருந்தது.

Related posts

இன்றைய மருத்துவ ஆலோசனை

Tharani

மக்களின் எதிர்ப்பால் கோபுரங்கள் வௌியேற்றம்

கதிர்

கஞ்சாவுடன் ஐவர் கைது!

G. Pragas

Leave a Comment