செய்திகள் பிந்திய செய்திகள்

ஸ்ரீலசுகவை பாதுகாக்கும் அமைப்பு அவசியமில்லை – வீரகுமார

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கு அமைப்பொன்றை சந்திரிகா ஆரம்பிக்க வேண்டிய தேவையில்லை என்று கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கும் சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க தனித் திட்டம் இருக்க வேண்டிய அவசியமில்லை. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கும் முடிவு நாட்டின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 5ம் திகதி நடத்தப்பட்ட இரகசிய கூட்டத்தை தொடர்ந்தே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஹக்கீம் மற்றும் ரிஷாத் ஆகியோர் இவ்வாறு செயற்படுகிறார்கள். அந்த இரகசிய கூட்டத்தில் கலந்து கொண்ட சூத்திரதாரிகளுக்கு வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களிற்கான மூன்று தனித்தனி திட்டங்கள் இருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது வடக்கிற்கான திட்டத்தை செயற்படுத்துகிறது. ரிஷாத் மற்றும் ஹக்கீம் கிழக்கிற்கான திட்டத்தை செயற்படுத்துகின்றனர். சுதந்திரக் கட்சியின் ஒற்றுமையை உடைத்து உள் மோதல்களை உருவாக்கும் தெற்கிற்கான திட்டத்தை சந்திரிகா செயற்படுத்துகிறார்.

இப்போதைய நிலைமையில் சுதந்திரக்கட்சியை பாதுகாக்கும் அமைப்பை சந்திரிகா ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. தேவையெனில், சந்திரிகா, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஹக்கீம், ரிஷாட் ஆகியோர் இணைந்து ஐ.தே.கவை பாதுகாக்கும் அமைப்பை ஆரம்பிக்கட்டும் – என்றார்.

Related posts

சஜித்தின் மக்கள் சந்திப்பு இன்று

reka sivalingam

2ம் கட்டமாக ஐயாயிரம் ரூபாய் வழங்க ஜனாதிபதி பணிப்பு!

G. Pragas

ஐயாயிரம் ரூபாயில் மோசடி செய்த கிராம சேவகர்

G. Pragas