செய்திகள்

ஹஜ்ஜுப் பெருநாள் வழிபாட்டு நிகழ்வுகள்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கை வாழ் முஸ்லிம் உறவுகள் அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து இன்று ஹஜ்ஜு பெருநாளை கொண்டாடினார்கள்.

கொழும்பு

கொழும்பு தெவட்டகஹா பள்ளிவாசலில் இன்றையதினம் ஹஜ்ஜுப் பெருநாள் வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது கொவிட் -19 சுகாதார வழிமுறைகளை பின்பற்றி முஸ்லிம்கள் மத வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாயில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் சுகாதார முறைப்படி நடைபெற்றது.

கந்தளாய் இலாஹிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் இன்று (21) சிறப்பாக நடைபெற்றதோடு ஆண்களும் பெண்களும் புத்தாடைகளை அணிந்து சுகாதார நடைமுறைகள் மற்றும் சமஇடைவெளிகளை பேணி தொழுகையில் ஈடுபட்டார்கள்.

பெருநாள் தொழுகைகளை முகம்மட் ஸவாஹிர் மௌலவி நடாத்தியதோடு நாட்டின் கொவிட் வைரசின் தாக்கம் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.

வவுனியா

இஸ்லாமியர்களினால் ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் இன்று (21) வவுனியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வவுனியா பட்டாணிசூர் முகைதீன் ஜூம்மா பெரியபள்ளிவாசலில் மௌலவி ஏம்.அமீனுதீன் தலைமையில் தொழுகை இடம்பெற்றது.

இதன்போது கொரோனா பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சுகாதார விதிமுறைகளை பேணியவாறு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

மன்னார்

இஸ்லாமிய மக்கள் இன்றைய தினம் புதன் கிழமை (21) புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடினர்.

நாட்டின் பல பிரதேசங்களில் இஸ்லாமியர்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கொண்டாடினர்.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மக்களும் இன்றைய தினம் புதன் கிழமை (21) பெருநாளை கொண்டாடுகின்றனர்.

மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.

காலை 6.45 மணிக்கு பெண்களுக்கும் காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.

இத் தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது. இதன் போது ஹஜ்ஜுப் பெருநாளின் முக்கியத்துவம், அல்குர்ஆன் சமய நற்சிந்தனைகள், பற்றியும் இங்கு எடுத்து கூறப்பட்டது.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும் விசேடமாக துவா தொழுகைகள் இடம் பெற்றது. இதன் போது கலந்து கொண்டவர்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக சமூக இடைவெளிகளை பின் பற்றி கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266