in

ஹானா சிங்கரை சந்தித்த விக்னேஸ்வரன் எம்.பி

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் வதிவிட பிரதிநிதி ஹானா சிங்கரை இன்று (11) மதியம் க.வி.விக்னேஸ்வரன் எம்பி நேரில் சென்று சந்தித்தார்.

அப்போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. போரின் பின்னரான வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை, தேர்தலின் பின்னர் இங்கு காணப்படும் நிலைமை, கட்சிகளின் நிலவரம், அவர்களிடையேயான வேற்றுமைகள், ஐக்கிய நாடுகள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு நன்மையை வழங்கலாம் என்பது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

அதன் பின்னர் ஜெனிவாவில் வரும் மார்ச் மாதத்தில் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் மற்றும் வருங்காலத்தில் பொருளாதார ரீதியாக வட கிழக்கு மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் செய்யக்கூடிய நன்மைகள் எவை என்பது பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

31 எம்பிகளுக்கு சுய தனிமை அறிவுறுத்தல்!

பசி தீர்த்த குளம் பலி எடுத்தது!!! – (உண்மைக் கதை)