in ,

ஹிசாலினியின் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட்டது

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்து டயகம மூன்று பிரிவில் புதைக்கப்பட்ட ஹிசாலினியின் உடல் இன்று (30) காலை 8.30 மணியளவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது

நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி லுசாகா குமாரி தர்மகீர்த்தி முன்னிலையில் மூன்று சட்ட மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் அவரது உடல் தோண்டி எடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு அமைவாக பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் விசேட மருத்துவ குழுவின் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்ட உடல் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதனை போதனா மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவில் ஒரு வாரத்துக்குள் 15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா!

8 லஞ்ச ஊழல் வழக்குகளிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதி அமைச்சர்