in ,

ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கிளிநொச்சியில் போராட்டம்!

சிறுமி ஹிசாலினி உயிரிழப்புக்கு நீதி கோரி கிளிநொச்சியில் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் பாரதிபுரம் சூசைபிள்ளை கடை சந்திவரை நீண்டது.

பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம் ஆகிய கிராம மட்ட பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

“பள்ளி செல்ல வேண்டிய ஒரு பாலகியை உன் வீட்டில் வேலைக்கு வைத்துவிட்டு நல்லாட்சி செய்தாயோ?”,
“அரசே சிறுமியின் சாவுக்கு தீர்வு எங்கே?”
“யாராக இருந்தாலும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்”,
“பெண் அடிமையின் உச்சம் ஒரு பாலகியின் மரணம்”
“உன்னை நாம்பி ஒரு மக்கள் கூட்டம்… ஆனால் நீயோ முழு பித்தலாட்டம்”

போன்ற கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்தி சுமார் 30 நிமிடங்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

10,000க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு!

மருந்து பொருட்களின் விற்பனை அம்பலம்!

பதிவு செய்யப்படாத மருந்து பொருட்களின் விற்பனை அம்பலம்!