in ,

ஹிட்லர், இடியமீன் போல நல்லாட்சி அரசே பழிவாங்கியது – ஜயந்த

ஹிட்லர், இடியமீன் கொள்கைகளை போன்று இலங்கை வரலாற்றில் மிக மோசமான பழிவாங்கல்களை நல்லாட்சி அரசாங்கமே செய்தது என்று பிரதமரின் ஆலோசகரும் எம்பியுமான ஜயந்த வீரசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசியல் பழிவாங்கலாக தொடுத்ததாக தற்போதைய அரசின் ஜனாதிபதி ஆணைக்குழுவால் குறிப்பிடப்படும் வழக்குகளை நாடாளுமன்றம் ஊடாக இல்லாமல் செய்வது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தின் போது இதனை தெரிவித்தார்.

செய்ய வேண்டிய பழிவாங்கல்களை எல்லாம் செய்த சிஐடி அதிகாரி நிசாந்த சில்வா டயஸ்போரா (புலம்பெயர்ந்தோர்) துணையுடன் தப்பிச் சென்றுவிட்டார். என்றும் அவர் தெரிவித்து மேலும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றில் நடந்த மோதல் போக்கை ஆராய எம்பிகள் குழு!

கரைதுறைப்பற்று சபையின் ஆட்சியை தக்கவைத்தது கூட்டமைப்பு!