செய்திகள்

ஹிருணிகா வழக்கு மார்ச் மாதம் வரை ஒத்திவைப்பு

தெமட்டகொடையில் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை எதிர்வரும் வருடம் (2020) மே மாதம் 04 ஆம் திகதி மீண்டும் விசாணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டது. 

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது வழக்கினை எதிர்வரும் வருடம் (2020) மே மாதம் 04 ஆம் திகதி வரை ஒத்தி வைத்த நீதிபதி அன்றைய தினம் வழக்கின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் நீதிமன்றில் விடயங்களை முன்வைக்குமாறு இரு தரப்பின் சட்டத்தரணிகளுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

தெமட்டகொடை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

குறித்த வழக்கின் பிரதிவாதிகள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 

அதனடிப்படையில் குறித்த வழக்கு ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு எதிராக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ். பல்கலை பேரவைக்கு எதிராக உயர்நீதிமன்றை நாடிய குருபரன்

Tharani

மடு பகுதியில் மரம் தறித்த நபர் கைது

Tharani

கிழக்குத் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது

கதிர்