உலகச் செய்திகள்செய்திகள்

ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றின் லேசான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இது குறித்து ஹிலாரி கிளிண்டன் தெரிவிக்கையில், “கடுமையான நோய்க்கு எதிராக தடுப்பூசிகள் வழங்கும் பாதுகாப்புக்கு முன் எப்போதையும் விட நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அத்துடன் நான் நலம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தமாத ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282