கிழக்கு மாகாணம் செய்திகள்

ஹெரோயினுடன் சிறுவன் உட்பட ஐவர் சிக்கினர்!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பதினொரு கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் வெவ்வேறு இடங்களில் ஐந்து பேர் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரிவில் சட்டவிரோத நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டு சட்டவிரோத நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கமைய பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் இருந்து 21, 22 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்தோடு செம்மண்ஓடை கிராமத்தில் 15 சிறுவனன், 26 வயது இளைஞன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து தொல்லாயிரத்தி எண்பது மில்லி கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. (150)

Related posts

10 ஆண்டுகள் ஒழிந்திருந்த மரண தண்டனை கைதி கைது!

G. Pragas

அதிக விலையில் உணவுப் பொருட்களை விற்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை

reka sivalingam

மன்னாரில் அதிரடியாக கைப்பற்றப்பட்ட 200 கிலோ கஞ்சா

G. Pragas