செய்திகள்

ஹொரவப்பொத்தானை சம்பவம்; பொலிஸ் விசாரணை தொடங்கியது

அநுராதபுரம் – ஹொரவப்பொத்தானை பகுதியில் நோய்களை குணப்படுத்துவதாக தெரிவித்து நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் இருவர் உயிரிழந்தமை தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்த நபரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இருவரின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் கூறினர்.

குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்த பக்கவாத நோயாளர் ஒருவரும் இருதய நோயாளர் ஒருவரும் நேற்று உயிரிழந்தனர். கடும் வெப்பம் காரணமாக இவர்களின் மரணம் சம்பவித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தமிழுக்கு முதலிடம் கொடுத்ததை எதிர்த்தவர்கள் தீர்வு தருவார்களா?

G. Pragas

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் – அதிரடித் தீர்ப்பு

G. Pragas

ஐதேகவின் நேரடி ஔிபரப்பை தேர்தல்கள் ஆணைக்குழு நிறுத்தியது!

G. Pragas

Leave a Comment