செய்திகள் பிரதான செய்தி மலையகம்

ஹைலன்ஸ் தோட்டத்தில் மக்கள் மீது தாக்குதல்!

பண்டாரவளை பெருந்தோட்ட நெடுங் குடியிருப்பு தொகுதிக்குள் நுழைந்த இனம் தெரியாத நபர்கள் மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளது.

ஊவா ஹைலன்ட்ஸ் பெருந்தோட்ட எல்லவெல பிரிவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இதன்போது தாக்குதலில் தோட்ட இளைஞர்கள், மாணவர்கள் உட்பட ஐவர் காயமடைந்து, அட்டாம்பிட்டிய கிராமிய அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நள்ளிரவில் குறித்த தோட்டத்துக்குள் நுழைந்த இனம் தெரியாத நபர்கள் சிலர் தோட்ட மக்களுடன் கடுமையாக நடந்து கொண்டு, இனவாதமிக்க வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்ட பின்னரே தாக்குதல்களை நடாத்தினர்.

இது குறித்து, தோட்ட மக்கள், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேசுக்கு தகவல்களை வழங்கினர்.

இதனையடுத்து, இன்று (30) வடிவேல் சுரேஸ் குறித்த தோட்டத்திற்கு சென்று தோட்ட மக்களிடம் சம்பவம் குறித்த விடயங்களை அறிந்து, தோட்ட முகாமையாளர் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியையும் குறிப்பிட்ட எல்லவெல தோட்டப் பிரிவிற்கு வரவழைத்து, தோட்ட மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும்படியும், தாக்கியவர்களை தராதரம் பார்க்காமல் கைது செய்யும்படியும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கேட்டுக்கொண்டார்.

இதற்கமைய செயற்பட்ட பொலிஸார் மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். அத்துடன் குறிப்பிட்ட தோட்டப் பிரிவு மக்களுக்கு பாதுகாப்பினை வழங்கும் பொருட்டு, கலகம் அடக்கும் பொலிசாரை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

பாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா?

கதிர்

மாமல்லபுரத்தில் புத்தர் சிலை மாயம்

Bavan

புலிகளுடன் தொடர்பு என அப்பாவித் தலைவர்கள் கைது!- லிம்

G. Pragas

Leave a Comment