சினிமாசெய்திகள்

1.5 மில்லியன் பார்வையை கடந்து ‘ஜாலியோ ஜிம்கானா’ சாதனை

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பீஸ்ட்’ படத்தின் முதலாவது பாடலான ‘அரபிக் குத்து’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெருவரவேற்பைப் பெற்றது. இந்த நிலையி்ல் அடுத்த பாடலான ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் தற்போது வெளியாகி இதுவரை 1.5 மில்லியன் லைக்குகளை அள்ளி உள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’

இந்தப் படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். எதிர்வரும் மாதம் இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து #BeastUpdate ஹேஷ்டேக்கை தொடர்ந்து டிரெண்டிங் ஆக்கி வந்தனர்.

இந்த நிலையில் ரசிகர்களின் நீண்ட காத்திருப்பின் பின் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை நேற்று வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பாடலை அனிருத் இசையில் விஜய் தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார்.

 

விஜய் சொந்த குரலில் பாடியுள்ள பாடல் என்பதால் ரசிகர்கள் இதனை வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.

அத்துடன் பீஸ்ட் படத்தின் ரிலீஸை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282