செய்திகள் பிரதான செய்தி மலையகம்

“1000 ரூபாய்” வழங்க அமைச்சரவை தீர்மானம்!

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள அமைச்சரவை இன்று (14) தீர்மானித்துள்ளது.

இதற்கான நிதியை உடனடியாக ஒதுக்குமாறு ஜனாதிபதியும் பிரதமரும் கூட்டாக அமைச்சரவையில் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அரசு நாளை (15) உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது.

அதேசமயம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தி இதனை அறிவிக்கவுள்ளார்.

Related posts

நாடாளுமன்ற திகதி குறித்த விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு!

G. Pragas

“மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள்” ஆய்வு நூல் வெளியீடு!

G. Pragas

வித்தியா கல்வி நிலையத்தில் சிறப்புற இடம்பெற்ற ஆசிரியர் நாள் நிகழ்வு

G. Pragas