செய்திகள்யாழ்ப்பாணம்

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் (டிராக்டர்) இராணுவத்தினரால் துப்பாக்கிச்சூடு நடத்தி மடக்கிப் பிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலியில் நேற்று நடந்துள்ளது.

சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை நடைபெறுகின்றது என்று இராணுவத்தினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

மணல் ஏற்றியவாறு பயணித்த உழவு இயந்திரம் ஒன்று இராணுவத்தினரின் சமிக்ஞையை மீறிப் பயணித்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

உழவியத்திரத்தைச் செலுத்திச் சென்ற 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும், கைப்பற்றப்பட்ட உழவியந்திரமும் பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994