செய்திகள் பிரதான செய்தி வவுனியா

11 கோரிக்கைகளை முன்வைத்து ஆதரவை வழங்க தவிகூ முடிவு!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் 11 கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் அவற்றை ஏற்பவர்களுக்கு ஆதரவளிக்கவும் தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் வவுனியாவில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (28) இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

  • இந்திய அரசியல் சாசனத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார பரவலாக்கல் முறையிலான அதிகார பரவலாக்கல் வழங்கப்பட வேண்டும்.
  • தென்னாபிரிக்காவில் உள்ள அடிப்படை உரிமைச் சட்டத்தினையும் இணைத்துக் கொள்ள வேண்டும். உள்ளிட்ட இரண்டு முதன்மை கோரிக்கைகளை கொண்டே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களுடன் எடுத்துச்சென்று கலந்துரையாடுவதற்காக செயற்குழு உறுப்பினர் அரவிந்தன் தலைமையிலான நால்வர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு ஜனாதிபதி வேட்பாளர்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவினை கட்சிக்கு அறிவித்த பின்னர் தீர்மானம் மேற்கொண்டு எந்த வேட்பாளருக்கு ஆதரிப்பது என மக்களுக்கு அறிவிக்கும் எனவும் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியா தீ விபத்து; பல இலட்சம் நாசம்

கதிர்

இராணுவ சோதனைச் சாவடிகள் இராணுவ மயமாக்கலாகக் கூடாது

Tharani

கல்வியியல் கல்லூரி மாணவர்களினால் இராசவீதியில் சிரமதானம்

G. Pragas