செய்திகள்

முன்னாள் சுவிஸ் தூதுவர் தலைமையிலான குழு இலங்கைக்கு வருகை

சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி தொடர்பாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவரான ஜோர்ஜ் ப்ரீடன் தலைமையில் ஒரு குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாக சுவிஸ் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரியான கானியா பனிஸ்டர் ப்ரான்ஸிஸ் கைது செய்யப்பட்ட நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தநிலையிலேயே முன்னாள் சுவிஸ் தூதுவர் தலைமையிலான குழு இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சற்றுமுன் விபத்தில் இருவர் பலி!

G. Pragas

தமிழரின் வாழ்வியலை பிரதிபலிக்கும் சுவர் ஓவியங்கள்

G. Pragas

புத்தளத்தில் மீண்டும் 2 மணிக்கு ஊரடங்கு அமுல்!

Tharani