செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

யாழ்.பருத்தித்துறையில் வாள்வெட்டு!

யாழ்.பருத்தித்துறை நகரில் உள்ள தையல் கடை ஒன்றுக்குள் முக மூடிகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று கடையை அடித்து நொருக்கியதுடன், உரிமையாளரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மின்வெட்டு அமுலில் இருந்த சமயம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட பகை காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை யாழில் கடந்த ஓரிரு நாட்களில் 10க்கும் ஏற்பட்ட வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214